உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பள்ளி சீலிங் பெயர்ந்து விழுந்து 5 மாணவ - மாணவியர் பலத்த காயம்; பயன்பாட்டிற்கு வந்து 3 மாதமே ஆன கட்டடம்

அரசு பள்ளி சீலிங் பெயர்ந்து விழுந்து 5 மாணவ - மாணவியர் பலத்த காயம்; பயன்பாட்டிற்கு வந்து 3 மாதமே ஆன கட்டடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுராந்தகம்: அரசு பள்ளியில் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததில் ௫ மாணவ - மாணவியர் பலத்த காயமடைந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு நடுநிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர். நேற்று மதியம், 6ம் வகுப்பைச் சேர்ந்த 14 மாணவர்கள்,வகுப்பறை வெளியே வராண்டாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென, கட்டடத்தின் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்தது.இதில் ரக் ஷித், கோகுல், கோபிகா, தேன்மொழி, வைஷாலி ஆகிய ஐந்து மாணவ - மாணவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அவர்களை மீட்ட ஆசிரியர்கள், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இக்கட்டடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2024 -- 25ல், 33 லட்சம் ரூபாயில், இரண்டு வகுப்பறையுடன் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஏப்ரலில் பயன்பாட்டிற்கு வந்தது. மூன்றாவது மாதத்தில், கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடத்தை, மறு ஆய்வு செய்த பின் தான் திறக்க வேண்டும். ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இது போல, இவர் கட்டிய கட்டடங்கள் தரமானதாக உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

theruvasagan
ஜூலை 17, 2025 17:08

பள்ளிக் கட்டிடம் தரமற்று போனதற்கு ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததுதான் காரணம்னு சொல்லிவிட்டு கூலாக போய்கிட்டேயிருப்போம்.


பாரத புதல்வன்
ஜூலை 17, 2025 12:42

குடியல் ஆட்சி மடிய இன்னும் 8 மாதங்களே உள்ளன....விழித்து கொள்ளுங்கள் மக்களே...100 ஆண்டுகள் கடந்த பள்ளிகள் கட்டிடங்கள் நிறைய உள்ளது ஆனால் தெரு மாடல் ஆட்சியாளர்கள் கட்டியது 100 நாட்கள் கூட நிலைப்பது இல்லை.... அதுபோல இந்த ஆட்சியை நிலைக்கமால் பார்த்து கொள்வது உங்கள் கைகளில் உள்ளது.


Muralidharan S
ஜூலை 17, 2025 12:15

தமிழகத்தில் 60 ஆண்டுகளாக, அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, எங்கும் எதிலும் லஞ்சம், ஊழல், கமிஷன்...காண்ட்ராக்ட் எடுத்தவன் கழகக்கண்மணியாக இருப்பான்.. அல்லது நிறைய கட்டிங் குடுத்து காண்ட்ராக்ட் எடுத்து இருப்பான்.. கட்டுமானத்தில் லாபம் பார்க்க காண்ட்ராக்ட் எடுத்தவன் வேறு என்ன செய்வான் ??? போனால் போகிறது என்று கொஞ்சம் சிமெண்ட் கலந்து மணலில் கட்டிடடத்தை கட்டி இருப்பான்.. போவது ஏழைகள் உயிர் தானே.. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கும் விலை குடுத்து வாயை மூடிவிடுவார்கள்.. மரபணுவில், ரத்தத்தில் ஊறிப்போய் இருக்கிறது பணவெறி - திராவிஷ கலாச்சாரத்தில்... மக்களும் காசு, இலவசம், குவாட்டர், பிரியாணி என்று வாங்கிக்கொண்டு தானே ஓட்டுப்போடுகிறார்கள் இந்த தீய முன்னேற்ற கழகங்களுக்கு.. யதா ராஜா , ததா பிரஜா.....


RAAJ68
ஜூலை 17, 2025 11:44

கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு போட்டு சம்பந்தப்பட்ட கட்டிட ஒப்பந்தக்காரரை உள்ளே தள்ள வேண்டும். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது ஏனென்றால் அவர்கள் 40% வரை கமிஷன் பெற்று வேலையை கொடுக்கிறார்கள் எனவே தரமற்ற வேலை தான் இவர்கள் செய்வார்கள். நூலகங்கள் சமாதிகள் சிலைகள் வைப்பதற்கு பல கோடிகளை தாராளமாக செலவழிக்கும் அரசு மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூட கட்டிடங்களை அலட்சியமாக தரமற்றதாக கட்டுகிறது. மாணவர்களின் உயிருடன் விளையாடுகிறது.


Umapathy AP
ஜூலை 17, 2025 11:38

கட்டிடத்தை ஆய்வு செய்து சான்று தந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 17, 2025 10:56

பள்ளிக்கட்டிடம் கட்டி 100நாட்கள் ஆகும் வரை அந்த கட்டிடம் நன்றாக இருந்திருக்கிறது என்பதை எந்த பத்திரிக்கையும் பாராட்டவில்லை. இதில் இருந்தே தெரிகிறது உலகிலேயே சிறந்த ஆட்சியை குன்றிய நாட்டில் நாங்கள் தருகிறோம் என்பது.


vbs manian
ஜூலை 17, 2025 10:32

கான்ட்ராக்டரிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் பில்செட்டில் செய்யக்கூடாது.. பிளாக் லிஸ்ட் செய்யவேண்டும்.


Jack
ஜூலை 17, 2025 11:01

Quality Control எஞ்சினீர் இருப்பாரே...சாம்பல் அதிகமுள்ள சிமெண்ட் ... சல்பர் நிறைந்த உப்பு தண்ணீர் மற்றும் கமிஷன் ... திராவிட மாடலில் கட்டப்பட்ட கட்டிடம் மூணு மாதம் தாங்கியதே பெரிய விஷயம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 17, 2025 10:30

100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் வெறும் 5 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டிருக்கிறது. 95 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்படாதவாறு அப்பாவின் குன்றிய நாட்டு திராவிட மாடல் கொம்பன் அரசு காப்பாற்றி இருக்கிறது. இருந்தாலும் அந்த 5 மாணவர்களுக்கும் தனித்தனியே சாரி நேற்றே பார்சல் செய்யப்பட்டுவிட்டது


VSMani
ஜூலை 17, 2025 10:27

உடனடியாக பொது நல வழக்கு தொடர்ந்து இதில் சம்பத்தப்பட்ட அனைவர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


sridhar
ஜூலை 17, 2025 10:06

ஐந்து லட்சம் கொடுத்துவிட்டால் பிறகு அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மீண்டும் திமுகவுக்கே வோட்டு போடுவார்கள் . காசுக்கு கை நீட்ட ஆரம்பித்த பிறகு நல்லாட்சி பற்றி கவலை எதற்கு.


புதிய வீடியோ