பிடியாணை குற்றவாளிகள் 5 பேர் கைது
சென்னை, ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா, 35. இவரிடம், 2019, ஜன, 6ல் மர்மநபர்கள், 1,000 ரூபாயை வழிப்பறி செய்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட, ராயப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார், 32, உன்னிக்கிருஷ்ணன், 32, பரிமளா, 52, ரஹமத், 32 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த நான்கு பேரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.அதேபோல, கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான கவிதா, 43 என்பவரை, பழவந்தாங்கல் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.