மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை
25-Nov-2024
சென்னை, டவண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையோர பகுதிகளில், புதிய கட்டடங்களுக்கு, 5 மடங்கு வரை எப்.எஸ்.ஐ., என்ற தளபரப்பு குறியீட்டுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுார் - மீஞ்சூர் இடையே, 62 கி.மீ., தொலைவுக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது. மொத்தம், 400 அடி அகலம் உள்ள இந்த சாலையில், 236 அடி அகல பகுதி வாகனம், ரயில் போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய, 164 அடி அகல பகுதி, எதிர்கால தேவைக்காக ஒதுக்கப்பட்டது. இந்த பகுதியையும், அது சார்ந்த நிலங்களையும் மேம்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. முறைப்படுத்தப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது என்ற அடிப்படையில், புதிய முழுமை திட்டம் தயாரிக்க முடிவானது. இதற்காக, டில்லியை சேர்ந்த, 'ருத்ரபிஷேக் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் தேர்வானது. இந்த வழித்தடத்தில், வண்டலுார், பூந்தமல்லி, செங்குன்றம், மீஞ்சூர் பகுதிகளை மையமாக வைத்து, நகர்ப்புற வளர்ச்சி ஊக்குவிக்கப்பட உள்ளது. தொழில், வணிக மற்றும்குடியிருப்பு திட்டங்களுக்கான மனைகள், நில தொகுப்பு திட்டம் வாயிலாக உருவாக்கப்படும். இதில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களுக்கு, ஐந்து மடங்கு வரை எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை அனுமதிக்கப்பட உள்ளது.
25-Nov-2024