53 லட்சம் கிலோ கட்டட கழிவு 7 நாட்களில் அகற்றம்
53 லட்சம் கிலோ கட்டட கழிவு 7 நாட்களில் அகற்றம் சென்னை, சென்னையில் பூங்கா, மேம்பாலங்கள், மயானங்கள், உட்புற சாலைகளை துாய்மையாக வைத்திருக்க, மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டட கழிவால், பல இடங்களின் பொலிவு குறைந்து காணப்பட்டது. நீர்வழித்தடங்களில் அடைப்பு ஏற்படவும் கட்டட கழிவு காரணமாக உள்ளது. இதனால், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 53.23 லட்சம் கிலோ கட்டட கழிவு அகற்றப்பட்டது. அவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்கில் கொட்டப்பட்டன.