உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பழைய பொருட்கள் 59.70 டன் அகற்றம்

 பழைய பொருட்கள் 59.70 டன் அகற்றம்

சென்னை,சென்னை மாநகராட்சியில் சேதமடைந்த சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் உள்ளிட்டவை, சனிக்கிழமைதோறும் வீடுகளில் இருந்து மாநகராட்சி அகற்றி வருகிறது. அதன்படி, 75 வீடுகளில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 59.70 டன் பழைய பொருட்கள் நேற்று சேகரிக்கப்பட்டன. கடந்த அக்., 11ம் தேதி முதல் இதுவரை, 325.57 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது. சனிக்கிழமைதோறும் இச்சேவையை பெற, மாநகராட்சியின், 'நம்ம சென்னை' செயலி, 1913 என்ற தொலைபேசி எண், 94450 61913 என்ற வாட்ஸாப் எண்ணில், முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை