உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காப்பகத்தில் தவறி விழுந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு

காப்பகத்தில் தவறி விழுந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு

முகப்பேர்,காப்பகத்தில், தொட்டிலில் துாங்க வைத்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. முகப்பேர் பகுதியில், அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது. அங்கு, திருவேற்காடைச் சேர்ந்த பவானி, 34, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், காப்பகத்தில் உள்ள ஆறு மாத ஆண் குழந்தைக்கு, நேற்று முன்தினம் பாட்டிலில் பால் கொடுத்து விட்டு, தொட்டிலில் துாங்க வைத்தார். பின், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது, குழந்தை தரையில் விழுந்து மயங்கி கிடந்தது தெரிந்தது. பின், குழந்தையை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது தெரிந்தது. நொளம்பூர் போலீசார், வழக்கு பதிந்து பவானி மற்றும் காப்பக ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ