ரூ.6,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி பணி
கொளத்துார், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஜமாலியா மற்றும் ராஜா தோட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், கொளத்துார் நவீன சந்தை மற்றும் திரு.வி.க., நகர் பேருந்து நிலைய பணிகளையும், அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.பின் அவரது பேட்டி:ஜமாலியா பகுதியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், தை மாதத்தில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள், மிக வேகமாக நடந்து வருகிறது. குறைந்தபட்சம், 2025 டிசம்பருக்குள், 200 பணிகளையாவது முடிப்போம்.ஆரம்பத்தில், 4,014 கோடி ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டம், 6,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.