உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 61 கொடிக்கம்பங்கள் ஆவடியில் அகற்றம் 

61 கொடிக்கம்பங்கள் ஆவடியில் அகற்றம் 

ஆவடி:தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி சாலை மற்றும் தெருக்களில், கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அரசியல் கட்சியினரின் தாமாக முன்வந்து அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இதன்படி, பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தாங்களாக முன்வந்து கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனர். கொடிக்கம்பம் அகற்றுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆவடியில், பொது இடங்களில் இருந்த கொடி கம்பங்கள் நேற்று அகற்றப்பட்டன.ஆவடி செக் போஸ்ட் முதல் பருத்திப்பட்டு வரை, 6 கி.மீ., துாரத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 61 கொடிக்கம்பங்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், 'பொக்லைன்' உதவியுடன் நேற்று அகற்றப்பட்டன. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க, ஆவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீதமுள்ள இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் விரைவில் அகற்றப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை