மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்தல் வாலிபர் கைது
25-Dec-2024
பூந்தமல்லி, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியே வந்த கார் மற்றும் கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள், 6,500 கிலோ இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.அவற்றை பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீசார், பூந்தமல்லி அருகே, அய்யப்பந்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம், 38, குமார், 34, விக்னேஷ், 27, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இதில், கனகலிங்கம் ஏற்கனவே குட்கா கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் இருந்துள்ளார். 20 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த இவர், மீண்டும் குட்கா கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
25-Dec-2024