மேலும் செய்திகள்
ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரம்
2 minutes ago
இன்று இனிதாக (25/11/2025)
3 minutes ago
வங்கக்கடலில் சென்யார் புயல் உருவாக வாய்ப்பு: 11 மாவட்டங்களில் இன்று மழை
22 hour(s) ago | 1
கே.கே.நகர்: கே.கே.நகர் பகுதியில், 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து, மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கே.கே.நகர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி, 78. இவர், மகன் பிரசாத், 49 என்பவருடன் வீட்டின் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தார். ராமலட்சுமி நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் இரண்டாவது தளத்தின் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது மயக்கம் அடைந்து, பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப் படுகிறது. அவரது மகன் பிரசாத், தாய் ராமலட்சுமியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இடுப்பு மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, நள்ளிரவில் உயிரிழந்தார். இது குறித்து, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருவொற்றியூர், இரட்டை மலை சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25. கடந்த, 18ம் தேதி மதியம், மூன்றாவது மாடியில் இருந்து, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை உயிரிழந்தார். திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 minutes ago
3 minutes ago
22 hour(s) ago | 1