உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு

ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு

கிண்டி,: சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் வசிப்போருக்கு, கிண்டியில் 1,700 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி வீடு கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு கனமழை வெள்ள பாதிப்புக்கு பின், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை பகுதி அடையாறு ஆற்றங்கரையில் வசித்தவர்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கம் பகுதிக்கு மறுக்குடியமர்வு செய்யப்பட்டனர். சில மாதங்களாக, மறுக்குடியமர்வு செய்ய முயன்றபோது, அதிக துாரம் என்பதால் பலர் வெளியேற விரும்பவில்லை. இவர்களின் தொழில் வசதிக்காக, மொத்த மக்களையும் ஒரே பகுதியில் குடியமர்த்த வேண்டாம் எனவும், வசிப்பிடத்தில் இருந்து 5 கி.மீட்டருக்குள் வீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதற்காக, கிண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி, அருளாயன்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் இடம் உள்ளது. இதில், 1,700 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, அரசு திட்டமிட்டுள்ளது; விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதன்வாயிலாக, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிப்போருக்கு இங்கு வீடு கிடைக்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை