உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கிண்டி:கிண்டி ரயில் நிலையம் அருகில், சந்தேகப்படும் வகையில் நின்ற மூன்று பேரிடம், நேற்று முன்தினம், ரோந்து போலீசார் விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால், ஒரு நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அதில், 8 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து, திருவாரூர் கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது.கிண்டி போலீசார், திருவாரூரை சேர்ந்த தேவசிவா, 20, காஞ்சிபுரத்தை சேர்ந்த விஜய், 25, மன்சூர், 26, ஆகியோரை கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை