உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில சப் - ஜூனியர் ஹாக்கி காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி

மாநில சப் - ஜூனியர் ஹாக்கி காலிறுதிக்கு 8 அணிகள் தகுதி

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட், வேலுார் ஹாக்கி யூனிட் ஆகியவை இணைந்து, ஆடவருக்கான சப் - ஜூனியர் ஹாக்கி சாம்பின்ஷிப் போட்டிகள், வேலுாரில், இம்மாதம் 19ம் தேதி துவக்கின.இந்த போட்டிகளில், சென்னை, காஞ்சிபுரம், கோவை உட்பட, 32 மாவட்ட அணிகள் எட்டு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. 'லீக்' போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன.இதில், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, வேலுார், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை ஆகிய, எட்டு மாவட்ட அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதி முதல் போட்டியில் கிருஷ்ணகிரி, மதுரை; இரண்டாவது போட்டியில் சென்னை, துாத்துக்குடி; மூன்றாவது போட்டியில் ராமநாதபுரம், திருச்சி அணிகள் மோதுகின்றன. கடைசி போட்டியில் திருநெல்வேலி, வேலுார் அணிகள் போட்டியிடுகின்றன. இதில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை