மேலும் செய்திகள்
பாலியல் தொழில் நடத்தியோர் கைது
14-Nov-2024
பாலியல் தொழில் நடத்தியோர் கைது
14-Nov-2024
நொளம்பூர், நொளம்பூர், தாட்டியா நகர், ஸ்ரீராம் நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள, 'ஸ்பா' ஒன்றில், பாலியல் தொழில் நடப்பதாக நொளம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தனிப்படை போலீசார், கடந்த 23ம் தேதி, ஸ்பா சென்டரில் அதிரடியாக நுழைந்தனர்.அங்கு வெளிமாநில இளம் பெண்கள் எட்டு பேரை, மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. அந்த பெண்களை மீட்ட போலீசார், காப்பகத்தில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக, நொளம்பூரை சேர்ந்த கரண், 28; ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர், 53; கள்ளக்குறிச்சி மாவட்டம், கேளபுத்தமங்கலத்தைச் சேர்ந்த சிவகுமார், 20 ஆகிய மூவரையும் கைது செய்தனர். ஸ்பா சென்டரில் இருந்து 6,000 ரூபாய், 13 மொபைல் போன்கள், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
14-Nov-2024
14-Nov-2024