உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போரூர் - கோடம்பாக்கம் இடையே தயாராகும் 5.கி.மீ., பிரமாண்ட டபுள் டக்கர் மேம்பாலம் * 2026 ஜூனில் மெட்ரோ ரயில் சேவை துவக்க முடிவு

போரூர் - கோடம்பாக்கம் இடையே தயாராகும் 5.கி.மீ., பிரமாண்ட டபுள் டக்கர் மேம்பாலம் * 2026 ஜூனில் மெட்ரோ ரயில் சேவை துவக்க முடிவு

சென்னை, போரூரில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதில், 5 கி.மீ., துாரத்துக்கு இரு வழித்தட மெட்ரோ ரயில்களும் இயக்கும் வகையில், 'டபுள் டெக்கர்' பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டாம் கட்டமாக, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 26 கி.மீ., மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை, மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது. பூந்தமல்லி பைபாஸ் - போரூர் இடையே 9 கி.மீ., மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் முடிந்து, இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் அடுத்தகட்டமாக, போரூர் - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் இடையே, 9 கி.மீ.,க்கு மேம்பால மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சென்னையில் இரண்டாம் கட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார்; பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. அதாவது, ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில், 'டபுள் டெக்டர் லைன்' எனும், இரண்டடுக்கு மேம்பால பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாலம், 5 கி.மீ., அமைக்கப்படுகிறது. இந்தபகுதியில், நான்கு ரயில் நிலையங்கள் அமைகின்றன. இந்த பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன், பிரத்யேக ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சவாலான பணி இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், போரூர் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையே, 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மாதவரம் - சோழிங்கநல்லுார் மற்றும் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடங்களில், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன. இவை, மெட்ரோ வழித்தடங்களும் இணைக்கப்படுவதால், பிரம்மாண்டமான இரண்டடுக்கு மேம்பால பாதை அமைக்கப்படுகிறது. இரண்டும், வெவ்வேறு வழித்தட மெட்ரோ ரயில் பாதைகள். ,நிலத்தில் இருந்து முதல் அடுக்கு 15 மீட்டரிலும், 2வது அடுக்கு 30 மீட்டரிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பிரம்மாண்டமான துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மீது, 140 மீட்டர் உயரம், 22 மீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரத்யேக, 'கர்டர் லாஞ்சர்' வகை ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி, இப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் எடை 500 டன். ஒரு இயந்திரத்தின் விலை, 12 கோடி ரூபாய். இரண்டடுக்கு மேம்பாலத்தில் நான்கு ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி சவாலாக இருக்கிறது. மேம்பால பகுதியில் ஒரே துாணில், நான்கு மெட்ரோ ரயில்கள் இயக்கும் வகையிலும், சர்வீஸ் லைன் இருக்கும் இடங்களில் ஐந்து மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக்காலம் நெருங்க உள்ளதால், கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பகுதிகளில் மட்டும், 2,400 பேர் பணியாற்றி வருகின்றனர். போரூர் - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி