உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண ஆசை காட்டி மோசடி டிவி பாடகர் மீது வழக்குப்பதிவு

திருமண ஆசை காட்டி மோசடி டிவி பாடகர் மீது வழக்குப்பதிவு

சென்னை:பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி, கட்டாய கருக்கலைப்பு செய்யச் சொல்லி ஏமாற்றி விட்டதாக, தனியார் 'டிவி' நிகழ்ச்சி பாடகர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:கடந்த மே மாதம், சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் குருகுகன் அறிமுகமானார். தனியார் 'டிவி' இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். 'ேஹப்பி ஸ்ட்ரீட்ஸ்' என்ற நிகழ்ச்சியிலும் பாடி உள்ளார்.என் மொபைல் போன் எண்ணை வாங்கி, நட்பாக பேசி வந்தார். தனக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வருவதாக கூறிய அவர், 'உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது' என்றார். 'நான் உங்களை விட ஐந்து வயது மூத்தவள்' என்றேன்; 'அது ஒன்றும் பிரச்னை இல்லை' என்று கூறினார்.'நீங்கள் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். இதனால் ஒத்துவராது' என, மறுப்பு தெரிவித்தேன். 'ஜாதி பெரிய விஷயம் அல்ல' எனக் கூறி, என் வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் பெண் கேட்டார்.என் பெற்றோரும், 'நீங்கள் சொல்வது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. என் பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது' என, கூறி விட்டனர்; அப்போதும் அவர் விடுவதாக இல்லை.தொடர்ந்து, எனக்கு திருமண ஆசை காட்டி வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, ஜூலையில் என் அக்கா வீட்டில் நான் மட்டும் இருந்தபோது, அங்கு வந்தார். தனிமையில் இருப்பதை பயன்படுத்தி, என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருந்தார். என்னை பதிவு திருமணம் செய்வதாக கூறி, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியே, பலமுறை நெருக்கமாக இருந்தார்.நான் கருவுற்றேன். இது எங்கள் வீட்டிற்கு தெரிந்தால், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கட்டாய கருக்கலைப்புச் செய்ய வைத்தார். தற்போது, ஜாதியை காரணமாக கூறி, திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இப்புகார் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 07, 2024 06:18

"...மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் குருகுகன் அறிமுகமானார். தனியார் டிவி இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் பாடி உள்ளார். என் மொபைல் போன் எண்ணை வாங்கி, நட்பாக பேசி வந்தார்.". ஆத்தா தாராளப் பிறபி. யார் போன் நம்பர் கேட்டாலும் கொடுத்து விடுவார். "...தனிமையில் இருப்பதை பயன்படுத்தி, என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருந்தார். என்னை பதிவு திருமணம் செய்வதாக கூறி, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியே, பலமுறை நெருக்கமாக இருந்தார்". என்னமோ போத்தா நான் கூட உனக்கு விரலை வாயில் வைத்தால் கூட கடிக்கத்தெரியாது போலியிருக்கிறது என்று உன்னை குறைத்து மதிப்பிட்டு விட்டேன். "ஒன்னும் தெரியாத பாப்பா, ஒரு மணிக்கு ........"


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை