ஸ்பைடர் மேன் போல தொங்கிய போதை ஆசாமி
ஆவடி: மேம்பாலத்தில் இருந்து கேபிளை பிடித்து 'ஸ்பைடர் மேன்' போல தொங்கிய போதை ஆசாமி, கேபிள் அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஆவடி அடுத்த நெமிலிச்சேரி, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தில், நேற்று காலை வாலிபர் ஒருவர், 'ஸ்பைடர் மேன்' போல இணையதள கேபிளை பிடித்தபடி 30 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார். திடீரென கேபிள் அறுந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, பட்டாபிராம் போலீசார் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலகொண்டமாஜி, 40, என்பதும், மது போதையில் நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் நடந்து சென்றுள்ளார். அந்நேரம், மேம்பாலத்தை ஒட்டி சென்ற இணையதள கேபிளை பிடித்து, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இறங்கியபோது விழுந்தது தெரிந்தது. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.