கோயம்பேடு: சீசன் முடிந்து, கோயம்பேடு பூ சந்தைக்கு ஐஸ் பெட்டியில் எடுத்து வரப்படும் மல்லிகை பூ, கிலோ 2,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மல்லிகை பூ எடுத்து வரப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், பூ விலை உச்சத்தில் இருக்கும். தற்போது, சீசன் முடிந்த நிலையில், மல்லிகை பூ வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தைக்கு நேற்று, நிலக்கோட்டையில் இருந்து, 3 டன் மல்லிகை பூ, ஐஸ் பெட்டிகளில் வைத்து எடுத்து வரப்பட்டது. கடந்த வாரம் கிலோ, 1,500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, நேற்று 2,100 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், முல்லை 1,200; ஜாதி மல்லி 1,000; கனகாம்பரம் 1,000; பன்னீர் மற்றும் சாக்லேட் ரோஜா 100 - 120 ரூபாய்க்கு விற்பனையானது.