உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு, வரும் 5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
நவ 02, 2025 11:34

சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது, சாலையில் கவனமாக நடக்கவும், வாகனங்களை ஒட்டவும், அறிவுறுத்த படுகிறார்கள். விபத்துகளுக்கு திராவிட மாடல் அரசும், அதிகாரிகளும் பொறுப்பல்ல.


புதிய வீடியோ