உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்டாவில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

அண்டாவில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

ஆவடி, ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் முரளி, 26; ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி கங்கம்மாள், 22. நேற்று, முரளி ஆட்டோ ஓட்டச் சென்றார்.உடல்நிலை சரியில்லாத நிலையில் மருந்து சாப்பிட்டுவிட்டு, மகள் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன், கங்கம்மாள் வீட்டில் துாங்கியுள்ளார். துாக்கம் தெளிந்து பார்த்த போது ஆண் குழந்தையைக் காணாததால், வீட்டின் வெளியே சென்று தேடியுள்ளார்.அப்போது, அங்கிருந்த 'ஸ்டீல்' அண்டாவில் குழந்தை தவறி விழுந்து, நீரில் மூழ்கி மயங்கிக் கிடந்துள்ளது. அதிர்ச்சியான கங்கம்மாள், உடனே அருகிலுள்ள மோரை அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில், குழந்தை இறந்தது தெரிந்தது.ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் குழந்தை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ