உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரத்தம் வழிந்த நிலையில் சென்ற பாதசாரி

ரத்தம் வழிந்த நிலையில் சென்ற பாதசாரி

சென்னை, அண்ணா நகர், முகப்பேர் மேற்கு பகுதியில் ஒருவர், தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில், நேற்று மதியம் நடந்து சென்றார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் என்பவர், '108' ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், அந்த நபரை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கணவன், மனைவி பிரச்னை காரணமாக அந்த நபர், ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவலர்கள் தாக்கியதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜெ.ஜெ., நகர் போலீசார், இதை மறுத்ததோடு, போதையில் தன்னை தானே அவர் காயப்படுத்தியிருக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ