உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் பிடிக்கும் போது தவறி விழுந்தவர் பலி

மீன் பிடிக்கும் போது தவறி விழுந்தவர் பலி

சென்னை:பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் குமரன், 40. அவரது மகன் ஜெயின், 10. இருவரும் நேற்று முன்தினம் மாலை பட்டினப்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் கட்டுமரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குமரனுக்கு வலிப்பு ஏற்பட்டு, தவறி விழுந்ததில் மாயமானார். அவரது மகன் சத்தம் போட்டு அலறியதை கேட்டு, அவரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், கரைக்கு அழைத்து வந்தனர். மாயமான குமரனை தேடினர்.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில், குமரனின் உடல் பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை