மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
அண்ணா நகர், அண்ணா நகர், 'ஒய்' பிளாக் பகுதியில் அகற்றப்பட்ட தெரு பெயர் பலகையை, மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் பெயர், முகவரி, வார்டு எண், மண்டலம் உள்ளிட்ட விபரங்களை, பொதுமக்கள் அறிவதற்கு வசதியாக, பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.முகவரி தேடுவோருக்கு, இந்த தெரு பலகைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆனால்,பெரும்பாலான இடங்களில், மாநகராட்சி பெயர் பலகைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைத்து, அஞ்சல் குறியீடுடன் புதிதாக, மாநகராட்சி பெயர் பலகை அமைத்து வருகிறது. அதிலும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மாற்றப்பட்டு, பெரும்பாலான இடங்களில் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.அண்ணா நகர் 'ஒய்' பிளாக் எட்டாவது தெருவில், புதிதாக அமைக்கப்பட்ட தெரு பெயர் பலகை சமீபத்தில் அகற்றப்பட்டது. எதற்காக அகற்றப்பட்டது எனத் தெரியாமல், அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.தற்போது, பலகை இருந்த இடம் குப்பை கொட்டும் இடமாக மாறி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அதே இடத்தில் மீண்டும் தெரு பெயர் பலகையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025