உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிவாரணம் வழங்க கோரி முற்றுகை

நிவாரணம் வழங்க கோரி முற்றுகை

சென்னை, கடந்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தில், சென்னை, சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, நிவாரணம் வழங்க கோரி, பிரதமரை நேரில் சந்தித்து, முதல்வர் வலியுறுத்தினார்.இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.அவர்கள், 'நிவாரணம் வழங்காமல் மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு கேட்ட 21,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி