பந்து எடுக்க சென்ற மாணவர் குளத்தில் விழுந்து பலி
ஓட்டேரி: வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜாக் டேனியல், 19; தனியார் கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்.ஓட்டேரி, மங்களாபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றவர், நண்பர்களுடன் நேற்று கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது, மங்களாபுரம் சேமாத்தம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் பந்து விழுந்துள்ளது. பந்தை எடுக்க சென்ற டேனியல், கால் இடறி குளத்திற்குள் விழுந்துள்ளார்.உடனே நண்பர்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மழைக்கால மீட்பு படையினர் குளத்தில் விழுந்த டேனியலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலே டேனியல் உயிரிழந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.