மின்சாரம் பாய்ந்த சம்பவம் சிகிச்சை பலனின்றி பெண் பலி
மாங்காடு, சென்னை அருகே, மாங்காடு சீனிவாசா நகர், அங்காளம்மன் கோவில் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற, மாங்காடு நகராட்சி சார்பில், மின்மோட்டார் அமைக்கப்பட்டிருந்தது.அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி, 38, என்பவர், மின் மோட்டார் அருகே உள்ள தொட்டியில் மாட்டிற்கு தண்ணீர் ஊற்ற, கடந்த 2ம் தேதி சென்றார்.அப்போது, சாந்தி மீது மின்சாரம் பாய்ந்து விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற சசிகலா, 36, மீதும் மின்சாரம் பாய்ந்தது. அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, மாங்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று சசிகலா வீடு திரும்பினார்.போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த சாந்தி, நேற்று, சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.மாங்காடு நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.