மாவிலை பறிக்க ஏறிய வாலிபர் மரத்தில் இருந்து விழுந்து பலி
கோயம்பேடு: மாவிலை பறிக்க மரத்தில் ஏறிய வாலிபர், தவறி விழுந்து உயிரிழந்தார்.கோயம்பேடு சந்தையில் தங்கி பணி புரிபவர் சக்திவேல், 38. இவர், நேற்று கிருத்திகை என்பதால், கோயம்பேடு சந்தையில் மாவிலை தோரணங்கள் விற்பனை செய்ய திட்டமிட்டார்.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தன் நண்பருடன், கோயம்பேடு சீனிவாசா நகர், 3வது தெருவில் உள்ள காலி மனையில் நின்ற மாமரத்தில் ஏறி மாவிலைகளை பறிக்கும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, எதிர்பாராத விதமாக மாமரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கோயம்பேடு போலீசார் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.