சரக்கு வாகனம் மோதி விபத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி
பல்லாவரம்: பல்லாவரம் மேம்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், தலை நசுங்கி பலியானார். பம்மல், சங்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ், 29. நேற்று மதியம், பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி, ரேடியல் சாலை வழியாக, 'டி.வி.எஸ்., ரோனின்' என்ற இருசக்கர வாகனத்தில் சென்றார். பான்ட்ஸ் மேம்பாலத்தில் ஏறியபோது, அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் ஒன்று, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சதீஷ், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.