நள்ளிரவு கழிப்பறை சுவர் மீது அமர்ந்திருந்த வாலிபருக்கு வலை
பெரியார் நகர்:பெரியார் நகரைச் சேர்ந்த, 23 வயது இளம்பெண் ஒருவர், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், இயற்கை உபாதைக்காக, வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.அப்போது, கழிப்பறை சுவர் மீது வாலிபர் ஒருவர் இருப்பதை கண்டு சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார், 21, என தெரிந்தது.திடீரென, பிரேம் குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை செம்பியம் போலீசார் தேடி வருகின்றனர்.