உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.25 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவானவர் சிக்கினார்

 ரூ.25 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவானவர் சிக்கினார்

சென்னை, நவ. 23- ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, மென்பொறியாளரிடம், 24.89 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுதா கார்த்திக், 44; மென்பொறியாளர். கடந்த பிப்., 10ம் தேதி, சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர், 'ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறி, 24.89 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 17ம் தேதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தீபா, 26, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த, கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த கிஷோர், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ