உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தலைமறைவு குற்றவாளி மீண்டும் கைது

 தலைமறைவு குற்றவாளி மீண்டும் கைது

துரைப்பாக்கம்: ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை, போலீசார் மீண்டும் கைது செய்தனர். பெருங்குடியை சேர்ந்தவர் வில்சன், 45, என்பவர் 2010ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரித்த துரைப் பாக்கம் போலீசார், காரப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தன், 41, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த இவர், ஒரு ஆண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது கடந்தாண்டு ஜூன் மாதம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை