மேலும் செய்திகள்
போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
04-Dec-2025
நொளம்பூர்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 30; பெயின்டர். இவர், கடந்த 2022ல் சென்னை திருமங்கலத்தில் பணியாற்றியபோது, அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சக்திவேல், சிறுமியை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இது குறித்த புகாரை அடுத்து விசாரித்த திருமங்கலம் மகளிர் போலீசார், சக்திவேலை 'போக்சோ' சட்டத்தின் கீழ கைது செய்தனர். சில மாதங்களில், ஜாமினில் வெளியே வந்த சக்திவேல், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன், சக்திவேலுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, விழுப்புரத்தில் சுற்றித்திரிந்த சக்திவேலை, திருமங்கலம் மகளிர் போலீசார், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
04-Dec-2025