உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகை ராதிகாவுக்கு டெங்கு காய்ச்சல்

நடிகை ராதிகாவுக்கு டெங்கு காய்ச்சல்

சென்னை :நடிகை ராதிகாவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில், ‛கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா, 62. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் முத்திரை பதித்துள்ளார். கடந்த 28ம் தேதி உடல்நல பாதிப்பு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற ராதிகாவுக்கு, டெங்கு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெற்ற பின், வீடு திரும்புவார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !