செம்மஞ்சேரி - தாம்பரம் 99சி தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்
சென்னை:பயணியரின் கோரிக்கையை ஏற்று, செம்மஞ்சேரி - தாம்பரம் மேற்கு இடையே, நேற்று முதல், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தாம்பரம் புறநகரில் பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது, புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்குவது குறித்து, மாநகர போக்குவரத்து திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அந்த வகையில், '99 சி' செம்மஞ்சேரி - தாம்பரம் மேற்கு வழித்தடத்தில், பயணியர் தேவை அதிகமாக இருப்பது தெரிந்தது.இந்த வழித்தட பேருந்து பெரும்பாக்கம், நுக்கம்பாளையம், பொலினேனி கார்டன் வழியாக இயக்கப்படுகின்றன.தற்போது, செம்மஞ்சேரியில் இருந்து 12 நடைகளும், தாம்பரத்தில் இருந்து 12 நடைகளும் என, 24 பயண நடைகள் இயக்கப்பட்டன.எனவே, கூடுதலாக நான்கு பேருந்து சேவை அதிகரித்து, நேற்று முதல் 64 நடைகளாக அதிகரித்து, அப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.