உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதித்யராம் உதவிக்கரம்

பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதித்யராம் உதவிக்கரம்

சென்னை, தமிழகத்தில், ரியல் எஸ்டேட் துறையில் ஈடு இணையற்ற அந்தஸ்தைப் பெற்றவர் தொழிலதிபர் ஆதித்யராம். சந்தை நிலவரங்களை முன்பே கணித்தல், மிக நுணுக்கமான விபரங்களை எதிர்நோக்குதல் மற்றும் வாடிக்கையாளர் மனநிறைவில் அவருக்குள்ள உறுதியான கவனம் உள்ளிட்டவை, வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையும், மதிப்பையும் ஈட்டித் தந்துள்ளது.பெரு நிறுவனம், பொழுதுபோக்கு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் கடினமாக உழைப்பு என, உழைப்பே வழிபாடு என்ற தாரக மந்திரத்துடன் தன் சாம்ராஜ்யத்தை நிறுவி முதல் தலைமுறை தொழில் முனைவோராக தலைநிமிர்ந்து நிற்கிறார்.இத்துறைகளில் பல வெற்றிகளை பெற்று, தலைசிறந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.ஆதித்யராம் குழுமத்தின் தனித்துவமான முயற்சியான 'ஆதித்யராம் உதவும் கரங்கள்' பிற்படுத்தப்பட்டோருக்காக, பல்வேறு அறக்கட்டளை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த முயற்சியின் ஓர் அங்கமாக, ஆதித்யராம் தனது மாளிகையில், பல ஆதரவற்றோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி உதவியுள்ளார். இது வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை