உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போரூரில் முளைத்த விளம்பர பேனர்கள்

போரூரில் முளைத்த விளம்பர பேனர்கள்

போரூர், வளசரவாக்கம் மண்டலம், போரூர் மேம்பாலத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் முளைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்படும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.இதையடுத்து, சென்னை நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன.இதனால், சற்று குறைந்திருந்த விளம்பர பேனர் கலாசாரம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் தலை துாக்கியுள்ளது. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் மேம்பாலத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் அதிகளவில் ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி விளம்பர பலகை வைக்க அரசியல்வாதிகள் உறுதுணையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை