உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகர்வால் கண் மருத்துவமனை சவுகார்பேட்டையில் திறப்பு

அகர்வால் கண் மருத்துவமனை சவுகார்பேட்டையில் திறப்பு

சென்னை: சவுகார்பேட்டை, மின்ட் சாலையில், டாக்டர் அகர்வால் நவீன கண் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டது. சவுகார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன், மருத்துவமனையை நேற்று திறந்து வைத்தார். இங்கு, கிட்டப்பார்வை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தனி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின், மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர் சவுந்தரி பேசியதாவது: வடசென்னையைச் சேர்ந்த மக்களுக்கு, கண் சிகிச்சையில் அறிவியல் ரீதியான, நவீன மருத்துவ சேவை வழங்குவோம். இம்மாதம் முழுதும், அனைத்து வயதினருக்கும், விரிவான கண் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. முன்பதிவுக்கு 89255 00414 எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். அகர்வால் கண் மருத்துவமனையின், மருத்துவ சேவைகளுக்கான இணை- தலைவர் டாக்டர் ஸ்மிதா நரசிம்மன் பேசுகையில், ''மிக சிக்கலான கண் பிரச்னைகளுக்கும், உயர் தொழில்நுட்ப உதவியுடன் சிகிச்சையளித்து குணமளிக்கும் திறன் எங்கள் மருத்துவமனைக்கு உண்டு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ