உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைச்சர் ராஜாவுக்கு எதிராக போலீசில் அ.தி.மு.க., புகார்

அமைச்சர் ராஜாவுக்கு எதிராக போலீசில் அ.தி.மு.க., புகார்

சென்னை, 'எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி குறித்து, ஆபாசமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட, அமைச்சர் ராஜா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, அ.தி.மு,க., வழக்கறிஞர்கள் பிரிவு இணைச் செயலர் பாலமுருகன் அளித்துள்ள புகார்:'எக்ஸ்' என்ற சமூக வலைதளத்தில், தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பதிவுகளை பார்த்தேன். அப்போது, எங்கள் கட்சி பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், அரை நிர்வாண கோலத்தில், மிகவும் கீழ்த்தரமாக கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த கேலிச்சித்திரத்தை மக்களிடம் பரப்பி, இரண்டு கட்சிகளுக்கிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதனால், சட்டம் ஒழுங்கை சீர்கொடுக்கும் நோக்கத்துடன் நடந்துள்ளனர். தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு, தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள ராஜாதான் தலைவர். இந்த ஆபாச கேலிச்சித்திரம் தொடர்பாக, அவரையும், பின்னணியில் உள்ள நபர்களையும் சட்ட ரீதியாக கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை