அ.தி.மு.க., நிதியுதவி
எண்ணுார், எண்ணுார், காமராஜர் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது, 54, முகமது யசூர், 52, சையது இப்ராஹிம், 51, முகமது உசேன், 49, உள்ளிட்ட நான்கு பேரும் துணி வியாபாரம் செய்கின்றனர். தீபாவளியன்று பட்டாசு தீ விழுந்து, இவர்களின் நான்கு குடிசைகளும் தீக்கிரையாகின. மேலும், தரைத்தள வீடுகளும் சேதமாகின. நல்வாய்ப்பாக, உயிர் சேதம் ஏற்படவில்லை.தீ விபத்தில், 'டிவி, பிரிஜ், ஏசி' கட்டில் மற்றும் பாத்திரங்கள் என, உடமைகள் இழந்து தவித்த, ஏழு குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., மேற்கு பகுதி சார்பில் நிவாரணம் மற்றும் நிதியுதவி, நேற்று வழங்கப்பட்டது. பகுதி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான குப்பன், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். தலா, 25 கிலோ அரிசி மூட்டை, 2,000 ரூபாய் பணம், வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை, ஏழு குடும்பத்தினருக்கும் வழங்கினர்.