உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டியூட்டி ப்ரீ பொருட்களுடன் வருவோரை அலைக்கழிக்கும் ஏர்போர்ட் அதிகாரிகள்

டியூட்டி ப்ரீ பொருட்களுடன் வருவோரை அலைக்கழிக்கும் ஏர்போர்ட் அதிகாரிகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 'டியூட்டி ப்ரீ' பொருட்கள் எடுத்து வரும் பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர்.சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணியர் வருகின்றனர்.குடியுரிமை சோதனை முடித்துவிட்டு, சுங்கத்துறை சோதனையை கடந்து வெளியே செல்வர். இவர்களின் உடைமைகளில் ஏதேனும் சந்தேகிக்கும்படி தங்கம், மின் உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தால், சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சோதனை செய்து பறிமுதல் செய்வர். முறையாக வரி செலுத்தாமல் கொண்டுவரும் பொருட்களுக்கு, சுங்க வரி செலுத்தும்படி கூற, சுங்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.இந்நிலையில், சர்வதேச விமான நிலையங்களின் வருகை பகுதியில், 'டியூட்டி ப்ரீ' எனப்படும் வரி இல்லாமல் பொருட்கள் வாங்கும் கடைகள் இயங்குகின்றன.இந்த கடைகளில் விலை உயர்ந்த சாக்லேட்கள், வாசனை திரவியங்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. பயணியர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து, வரி குறைவாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு வாங்கும் பொருட்களுக்கு சில எல்லை உண்டு. இப்படி விதிகளுக்கு உட்பட்டு பொருட்களை வாங்கி வந்தாலும், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் கூறியதாவது:வணிகம் தொடர்பாக சமீபத்தில் தாய்லாந்து நாட்டிலுள்ள பாங்காக் சென்றுவிட்டு, சென்னை விமான நிலையம் திரும்பினேன். வெளிநாட்டுக்கு சென்று திரும்பும் போது, டியூட்டி ப்ரீ கடைகளில் சாக்லேட் மற்றும் உயர் ரக தின்பண்டங்கள், மதுபாட்டில்கள் வாங்குவது வழக்கம். அப்படி சென்னை விமான நிலையத்தில் உள்ள கடையில், சில பொருட்களை வாங்கினேன்.அதிகாரிகள் சுங்க சோதனை செய்யும் போது, நான் கையில் வைத்திருந்த பொருட்களை பிரித்துப் பார்த்தனர்.அதற்கான முறையான ரசீது, விதிகளுக்கு உட்பட்ட அளவில் வாங்கியதை காண்பித்தும், அவற்றை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர். காரணம் கேட்ட போது கண்டுகொள்ளாமல், நீண்ட நேரம் நிற்க வைத்து அலைக்கழித்தனர்.பயணியர் பயன்பெறும் வகையில் தான், இந்த கடைகள் இயங்குகின்றன. ஆனால், இங்கு வாங்கும் பொருட்களை, ஏதோ கடத்தி வந்தது போல் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

chails ahamad
டிச 09, 2024 10:11

தற்போதைய நிகழ்வுகள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளதை, சுங்கத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, ஊடக துறையினரும் அக்கறை கொள்வார்களென நம்புவோம்.


Krishna Murthy
டிச 08, 2024 05:13

If this continues passengers will start boycotting buying items from DFS. Higher Airport officials should intervene and should take action on these people who act against law.


nisar ahmad
டிச 07, 2024 14:23

உள்நாட்டில் வாங்கும் பொருட்ளுக்குமா சோதனை அதூவும் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள்.


A Viswanathan
டிச 07, 2024 09:38

அதிகாரம் தலைக்குள் ஏறினால் இப்படி செய்வார்கள்.சம்பந்தப்பட்ட வர்கள் உடனடியாக தலையிட்டு மீண்டும் இதே போல் நிகழாது பார்த்துககொள்ள வேண்டும்.அவர்களின் மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.


அப்பாவி
டிச 07, 2024 08:42

சென்னைதானே... திருட்டு திராவிட பாரம்பரியம் மிக்க ஊர். புதுப்புது விதமாக ரூம் போட்டு யோசிச்சு ஆட்டையப் போடுவாங்க. ஏர் போர்ட்டில் இருபவர்கள் என்ன செவ்வாய் கிரகத்திலிருந்தா வந்து வேலை செய்யறாங்க?


chennai sivakumar
டிச 07, 2024 08:15

கொஞ்சம் அசால்ட்டாக இருந்தால் காலி. இது இன்று நேற்று அல்ல வெகு காலமாக நடக்கும் ஒன்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை