உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 234 தொகுதிகளும் வளர்ச்சி அமைச்சர் பெருமிதம்

234 தொகுதிகளும் வளர்ச்சி அமைச்சர் பெருமிதம்

சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலம், 142வது வார்டு, சைதாப்பேட்டை பஜார் சாலையில், சென்னை மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள வகுப்பறை கட்டடம் பழுதடைந்து காணப்பட்டது.இதையடுத்து, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி வார்டு மேம்பாட்டு நிதியில், 79 லட்சம் மதிப்பில் இரண்டு மாடி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:சைதாப்பேட்டை பஜார் சலையில் உள்ள சென்னை மாநகராட்சி துவக்க பள்ளி பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, 'பார்க்கிங்' வசதி, கழிப்பறை, நான்கு வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையுடன், 5,400 சதுர அடியில், கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.ஆறு மாத காலத்திற்குள் இப்பணிகள் நிறைவு பெற்று, கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.தி.மு.க.,வை தவிர சைதாப்பேட்டை வளர்ச்சிக்கு, வேறு எந்த கட்சியும் ஒரு சிறிய துரும்பை கூட எடுத்து போட்டிருக்க முடியாது. அதேபோல், 234 தொகுதிகளும் தி.மு.க., வால் வளர்ச்சி பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ