மேலும் செய்திகள்
இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்!
08-May-2025
சென்னை:திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சனிக்கிழமை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.தமிழக கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நிறைவான உணவு வழங்க அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, கோவில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த நான்கு ஆண்டுகளில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 11 கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டது. ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது 764 கோவில்களில் வழங்கப்படுகிறது.இந்த நிதியாண்டு முதல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.இதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் அனைத்து நாட்களிலும், கோவிலின் விசேஷ நாட்கள் என. 82நாட்கள் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டம் வாயிலாக ஆண்டிற்கு, 82 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-May-2025