மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.11.205
1 minutes ago
மனைவியை தாக்கிய கணவர் கைது
4 minutes ago
ரூ.1.80 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
21 hour(s) ago
சென்னை: ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மரபுப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் நேற்றிரவு 8:00 மணிக்கு இழுத்து மூடப்பட்டன. இன்று இரவு 8:00 மணிவரை யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தம், 107 ஏக்கர் பரப்பிலான இந்த கட்டடம், நிலம் உள்ளிட்டவை, உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே சொந்தமானது. இதை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒருமுறை, சென்னை உயர் நீதிமன்றம் முழுதும், 24 மணி நேரம் யாரும் செல்லாத வகையில் இழுத்து மூடப்படும். அப்போது, அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு, உள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த சொத்தின்மீது, உயர் நீதிமன்ற நிர்வாகத்துக்கு உள்ள ஆதிக்கத்தை நிலைநாட்ட, இந்த நடைமுறை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நேற்றிரவு 8:00 மணி முதல் இன்று இரவு 8:00 மணி வரை, உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, நேற்று இரவு 8:00 மணி முதல் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. அப்போது, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என, எவரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. இன்று இரவு, 8:00 மணிக்கு வாயில்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
1 minutes ago
4 minutes ago
21 hour(s) ago