உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் குழாய் சீரமைப்பு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

குடிநீர் குழாய் சீரமைப்பு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

அம்பத்துார், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அம்பத்துாரில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள், 771 பேருக்கு, உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது, அமைச்சர் நேரு பேசியதாவது:குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த, முதல்வரின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள, சென்னை குடிநீர் வாரிய குழாய்களை சீரமைக்கும் பணியை, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.அந்த பணிகளுக்காக, முதல்வர் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.இதனால், மக்களுக்கான சீரான குடிநீர் வினியோகம் விரைவில் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை