உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாழடைந்த சமுதாய நலக்கூடம் புதிதாக கட்ட ரூ.96 லட்சம் ஒதுக்கீடு

பாழடைந்த சமுதாய நலக்கூடம் புதிதாக கட்ட ரூ.96 லட்சம் ஒதுக்கீடு

ஒட்டியம்பாக்கம்,:சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி, பரங்கிமலை ஒன்றியம், ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் 13,000 பேர் வசிக்கின்றனர்.பகுதி மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப, கனிம வள நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் செலவில், 2,500 சதுர அடி பரப்பில், சமூக நலக்கூடம் கட்டும் பணி துவங்கி, 2006, ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இந்த கூடத்தில், ஒரேயொரு பெரிய அறை தவிர சமையல் அறை, உணவு பரிமாறும் அறை என, தனியாக எதுவும் இல்லை.துவக்கத்தில் வீட்டு நிகழ்ச்சிக்கு சமூக நலக்கூடத்தை பயன்படுத்திய மக்கள், போதிய வசதி இல்லாததால், நாளடைவில், பயன்படுத்தவில்லை.இந்நிலையில், உரிய வசதிகளுடன் நவீன சமூக நலக்கூடம் கட்ட வேண்டும் என, பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.இதையடுத்து, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், பயன்பாட்டில் இல்லாத சமூக நலக்கூடத்தை பார்வையிட்டார்.இன்றைய காலத்திற்கு ஏற்ற, நவீன சமூக நலக்கூடம் கட்ட, தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 96 லட்சம் ரூபாயை ஒதுக்கி உள்ளார். விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளதாக, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி