உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் கால்வாய் பணி கலெக்டருக்கு அல்வா

மழைநீர் கால்வாய் பணி கலெக்டருக்கு அல்வா

செங்குன்றம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுகிறது.தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி குமரன் நகர், பள்ளிக்குப்பம் மழைநீர் கால்வாய் முதல் மல்லிமா நகர், கன்னம்பாளையம், வண்ணப்புத்துார் ஏரி, சிறுகாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள், விளாங்காடு பாக்கம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளின் ஆசியுடன் ஆக்கிரமிப்பில் சிக்கியதே, இதற்கு பிரதான காரணம்.இது குறித்து சமூக ஆர்வலர் செல்வம் மீரான் என்பவர், புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பொன்னேரி தாலுகா வட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் அளித்தார்.இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெய்த பலத்த மழையால், தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஊராட்சிகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை ஓய்ந்து மூன்று நாட்கள் கடந்தும், வெள்ளநீர் வடியவில்லை.இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.அப்போது, தனியார் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற, கலெக்டர் உத்தரவிட்டார். இப்பணி மூன்று நாட்கள் மட்டுமே நடந்தது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால், கால்வாயில் தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகுதி வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை