மேலும் செய்திகள்
டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்
01-Jun-2025
தரமணி,சிதம்பரத்தை சேர்ந்தவர் சர்வேஸ்வரன், 22. சூளைமேட்டில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார்.சில நாட்களுக்கு முன், தரமணியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு, இன்டர்வியூக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். இன்டர்வியூ முடித்து வெளியே வந்து பார்த்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரிந்தது.புகாரின்படி, தரமணி போலீசார் விசாரித்தனர். அதில், வேலுார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த வெங்கடேஷ்பிரசாத், 23, என்பவர், இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது.சில மாதங்களுக்கு முன், சென்னைக்கு வேலை தேடி வந்த வெங்கடேஷ்பிரசாத், சரியான வேலை கிடைக்காததால், சொந்த ஊர் திரும்ப முடிவு செய்துள்ளார்.அப்போது, சர்வேஸ்வரனின் பைக்கை திருடி, ஆம்பூர் கொண்டு சென்றதும், அங்கு உணவு டெலிவரி வேலை செய்து வருவதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
01-Jun-2025