அம்மன் கோவில் சொத்து மீட்பு
சென்னை, -சென்னை, சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வணிக மனை மீட்கப்பட்டுள்ளது. இந்த கோவில், பொதுநல நிதியின் வாயிலாக புனரமைக்கும் வகையிலான திருப்பணிகள் தொடங்க உள்ளது. இதனால், கோவிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, உஸ்மான்கான் தெருவில், 520 சதுர அடி வணிக மனையில் அமைந்துள்ள கட்டடம், அறநிலையத்துறை உதவி கமிஷனர் பாரதிராஜா முன்னிலையில் மீட்கப்பட்டு கோவில் வசமானது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு, 30 லட்சம் ரூபாய்.