உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்.,மில் திருட முயற்சி திம்மாவரத்தில் துணிகரம்

ஏ.டி.எம்.,மில் திருட முயற்சி திம்மாவரத்தில் துணிகரம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில், தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்., மையத்தின் சுப்பர்வைசராக, கூடுவாஞ்சேரி அடுத்த கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன், 33, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை, திம்மாவரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு வந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்., மிஷினை உடைத்து, பணத்தை திருட முயன்றார்.அந்த நபரை மடக்கி பிடித்த வெங்கட சுப்ரமணியம், அவரை செங்கல்பட்டு தாலுகா போலீசில் ஒப்படைத்தார். நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன், 26, என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின், முத்துச்செல்வனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்