மறக்க முடியாத தருணம்: தலாய்லாமாவை சந்தித்த குமுதம் அதிபர் நெகிழ்ச்சி
சென்னை, தலாய்லாமாவை, தமிழகத்தின் முன்னணி வார இதழான, 'குமுதம்' பத்திரிகை அதிபர் ஜவஹர் பழனியப்பன், கடந்த வாரம் சந்தித்தார்.ஜவஹர் பழனியப்பன் கூறியதாவது: உலகம் முழுதும் பல கோடி மக்களால் நேசிக்கப்படுகிறவரும், பல்லாயிரம் நபர்களால் கடவுளாக கருதப்படுபவர் தலாய்லாமா, 90. அவர், கர்நாடகாவின் கூர்க் பகுதியில், மடாலயத்தை நிறுவி, 5,000 பேருக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்து வருகிறார்.தலாய்லாமாவை பலமுறை சந்திக்க விரும்பியும் இயலாமல் போனது. ஜன., 12ல், கூர்க் மடாலயத்திற்கு வந்த தலாய்லாமாவை, அங்கு பணிபுரியும் திபெத் நாட்டு மருத்துவர் வாயிலாக, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது, என் மருத்துவ பணி பற்றி அறிந்து, என் கன்னத்தை தடவி, துண்டு ஒன்றை அணிவித்து, என் மருத்துவ சேவை போற்றுதலுக்குரியது என்று, தலாய்லாமா பாராட்டினார். உலகம் போற்றும் ஒரு மாமனிதரை சந்தித்த அந்த சில நிமிடங்களில், நான் அடைந்த மன நிம்மதியும், சாந்தமும் என் வாழ்வில் மறக்கவே இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.